கண்கலங்கிய கேப்டன் ரோகித் சர்மா; ஆறுதல் படுத்திய ராகுல் திராவிட்: வைரல் வீடியோ

கண்கலங்கிய கேப்டன் ரோகித் சர்மா; ஆறுதல் படுத்திய ராகுல் திராவிட்: வைரல் வீடியோ

டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா கண்கலங்கினார். அவரை அணியின் பயிற்சியாளர் டிராவிட் ஆறுதல் படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடிலெய்டில் இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. விராட் கோலி தன் பங்குக்கு அரை சதம் அடித்தார். அதே நேரத்தில் ஹார்த்திக் பாண்டியா 63 ரன்கள் அடித்ததுதான் இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்வுக்கு கை கொடுத்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சொதப்பினர்.

இதே நேரத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த கனவை இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ்- ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் தகர்ந்து போனது. லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததை ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த கவலையுடன் இருந்தார். அவர் கண்கலங்கிய போது அருகில் பயிற்சியாளர் ராகுல் திராவிட் இருந்தார். அப்போது, ரோகித் முதுகில் தட்டி திராவிட் ஆறுதல் படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in