
சொத்துத் தகராறில் மாமனாரை மருமகள் படுகொலை செய்த சம்பவம் முறிசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேலமேடு வடக்குகோட்டத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனது இரண்டு மகன்களுக்கு எழுதிவைத்த உயிலை ரத்து செய்துள்ளார். இதனிடையே மகன் கணேசன் உயிரிழந்துவிட்டார். இந்தநிலையில், தனது கணவரின் சொத்துப் பங்கை தரும்படி கணேசனின் மனைவி மருதாம்பாள் மாமனாரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் மாணிக்கம் சொத்தை கொடுக்க மறுத்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று மீண்டும் சொத்தைக் கேட்டுள்ளார் மருதாம்பாள். அப்போதும் மாணிக்கம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மருதாம்பாள் அரிவாளால் வெட்டி மாமனாரை கொலை செய்தார். இதையடுத்து, மருதாம்பாள் தலைமறைவானார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மருமகளை தேடி வருகின்றனர்.
சொத்துக்கான மாமனாரை மருமகளே கொலை செய்துள்ள சம்பவம் முறிசி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.