மாமனார் கொடூர தாக்குதல்... கலைந்துபோன 4 மாத கரு: மருமகள் கண்ணீர் புகார்

மாமனார் கொடூர தாக்குதல்... கலைந்துபோன 4 மாத கரு: மருமகள் கண்ணீர் புகார்

மாமியார் தன்னைத் தாக்கியதால் வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டதாக மருமகள் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், பூவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு ஜெபசிங். இவரது மனைவி ஜெபகிருபா (34) இந்தத் தம்பதியினருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜெபகிருபா மீண்டும் கருவுற்றார். நான்கு மாத கர்ப்பிணியாக ஜெபகிருபா இருந்தார்.

அவரது கணவர் ஜெரால்டு ஜெபசிங் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெபகிருபா தன் மாமியார், மாமனாரோடு வசித்துவருகிறார். ஜெபகிருபாவிற்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுமாம். இந்நிலையில் அவரது மாமியார், மாமனார், கணவரின் சகோதரர் ஆகியோர் சேர்ந்து தன்னைத் தாக்கியதில் தன் நான்கு மாத கரு கலைந்துவிட்டதாக ஆட்சியர் தொடங்கி, எஸ்.பி அலுவலகம்வரை கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.

ஜெபகிருபாவின் புகாரின் பேரில் திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in