நகையை ஈடுவைத்து விவசாயம்; திருப்பி கேட்ட மகன்: கொடுக்க மறுத்த தந்தை கொடூரமாக கொலை

நகையை ஈடுவைத்து விவசாயம்; திருப்பி கேட்ட மகன்: கொடுக்க மறுத்த தந்தை கொடூரமாக கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது நகையை வாங்கிவிட்டுத் திருப்பித் தராத தந்தையை மகள் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், காலான்குடியிறுப்பைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி(63) விவசாயியாக உள்ளார். இவருக்கு வாசுகி என்னும் மனைவியும் நான்கு மகன்களும், ஆறு மகள்களும் உள்ளனர். இதில் அமுதா(35) என்ற மகளுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இதனால் இவர் ஆறுமுக பாண்டியுடன் வசித்து வந்தார். ஆறுமுகபாண்டி சுப்பராயபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தார்.

இதற்கு குத்தகைக்கான தொகையைச் செலுத்த அமுதாவின் நகைகளை அடகுவைத்துக் கொடுத்திருக்கிறார். அதை ஆறுமுகப்பாண்டித் திருப்பித் தரவில்லை. இந்நிலையில் அமுதா, தொடர்ந்து தன் தந்தை ஆறுமுகப் பாண்டியனிடம் நகையைத் திருப்பிக்கேட்டு வந்துள்ளார்.

நேற்று மாலை தோட்டத்தில் ஆறுமுக பாண்டி வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்து அங்கே போய் தன் நகையைத் திருப்பித்தரக் கேட்டு தகராறு செய்தார். ஒருகட்டத்தில் கோபத்தில் அமுதா தன் தந்தை ஆறுமுகப்பாண்டியின் தலையில் அருகில் கிடந்த அரிவாளால் வெட்டினார். இதில் வெட்டுக்காயம்பட்ட ஆறுமுகப்பாண்டி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பாண்டி இன்று உயிர் இழந்தார். தந்தையை பெற்ற மகளே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in