தயாராகுங்கள் மாணவர்களே: நீட், ஜே.இ.இ., க்யூட் நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

தயாராகுங்கள் மாணவர்களே: நீட், ஜே.இ.இ., க்யூட் நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

நீட், ஜே.இ.இ., க்யூட் நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., , என்.ஐ.டி. போன்றவற்றில், பொறியியல் இளநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், நாடு முழுவதும் பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இது தவிர நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை மற்றும் முதுநிலை சேர்வதற்கு, மத்திய பல்கலை பொது நுழைவு தேர்வு என்ற கியூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை, நேற்று இரவு வெளியிட்டது.

ஜே.இ.இ., மெயின் தேர்வு முதல் கட்டமாக, ஜனவரி 24 முதல் 31 வரை நடக்கிறது. ஜனவரி 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டம் ஏப்., 6, 8,10, 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களுக்கான, கியூட் தேர்வு, மே 21 முதல் 31 வரையிலும், வேளாண்மைக்கான ஐ.சி.ஏ.ஆர்., தேர்வு ஏப்ரல் 26,27, 28 மற்றும், 29ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் இதர அறிவிப்புகள், www.nta.ac.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in