கோயில்களில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் கூடாது; ஆபாச உடை கூடவே கூடாது: டிஜிபி உத்தரவு

ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி
ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி கோயில்களில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் கூடாது; ஆபாச உடை கூடவே கூடாது: டிஜிபி உத்தரவு

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க அறிவுரைகளை பின்பற்றும்படி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைக் கடைப்பிடிக்குமாறு, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வழிகாட்டுதல்களின்படி, “கோயில் விழாக்களில் ஆடல் பாடல்,கரகாட்டம், கலாச்சார நாடகம் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், அதை காவல்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து 7 நாட்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும்.

கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்தி கொள்ளலாம். ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது. பெண் கலைஞர்களுக்கு வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தக் கூடாது. இரட்டை அர்த்த பாடல் நிகழ்ச்சியில் இடம்பெற கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in