டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் மரணம்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் மரணம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மும்பை அருகே விபத்தில் உயிரிழந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இன்று மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது டிவைடரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. உயிரிழந்த மிஸ்திரிக்கு வயது 54.

பிற்பகல் 3.15 மணியளவில், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மிஸ்திரி பயணம் செய்தபோது சூர்யா ஆற்றின் பாலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்திரி, பின்னர் அக்டோபர் 2016ம் ஆண்டு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in