நாளை மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும்: மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

நாளை மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும்: மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கினாலும் ஒரு சில மாவட்டங்களிலே அதிக மழை பெய்தது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. குறிப்பாக கடந்த 10 நாட்களாக வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை. இந்த நிலையில் மீண்டும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால் நாளை முதல் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு டிச.6-ம் தேதி மாலையில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து மேற்கு-வடமேற்கில் நகர்ந்து படிப்படியாக புயலாக வலுபெற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

எனவே, மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில், மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரை சூறாவளி புயல் காற்று வீசும் என்ப தால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடலோர மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in