தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று: எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று: எச்சரிக்கும் வானிலை மையம்

இன்றும், நாளை மறுநாளும் குமரிக்கடல் பகுதிகளில் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்றும், நாளையும் வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (டிச 21) மற்றும் நாளை மறுநாள் (டிச 22) குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in