அண்ணனைப்போல் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயம்; அப்பாவி தொழிலாளர்களை வெட்டிய தம்பி: கோவையில் பயங்கரம்

வெட்டப்பட்ட வாலிபர்
வெட்டப்பட்ட வாலிபர் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயம்; அப்பாவி தொழிலாளர்களை வெட்டிய கும்பல்: கோவையில் பயங்கரம்

கோவை நீதிமன்றம் அருகே கொல்லப்பட்டவரின் தம்பி உயிர் பயத்தால் அப்பாவி  கட்டிடத் தொழிலாளர்கள் 3 பேரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை நீதிமன்றம் அருகே கடந்த 13-ம் தேதி கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (24),  அவரது நண்பர் மனோஜ் (23)  ஆகியோர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப் பட்டனர். இதில் கோகுல் அதே இடத்தில் இறந்தார்.  மனோஜ்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உயிரிழந்த  கோகுலின் சகோதரர், பிரதீப் (19) கீரணத்தம் அருகே குடியிருந்து  வருகிறார். 

இவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது நண்பர்களுடன்  லட்சுமி கார்டன் பகுதியில் நடந்து சென்றபோது, எதிரில் சிலர் வந்துள்ளனர். அவர்களை  பிரதீப் விசாரித்தபோது, நாங்கள்  ரத்தினபுரியை சேர்ந்தவர்கள் என்று கூறியதால்,  அண்ணனை  கொன்ற கும்பல் தன்னையும் கொலை செய்ய வந்துள்ளதாக நினைத்து  அவர்கள் மீது பிரதீப்பும், அவருடன் வந்த நான்கு  பேரும் அரிவாளால் வெட்டி சரமாரியாக  தாக்குதல் நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிமுத்து (34) என்பவருக்கு தலை, நெற்றி,  கை, கால் ஆகிய இடங்களில்  சரமாரியாக வெட்டு விழுந்தது.

தர்மபுரி மாவட்டம், தும்பநல்வியைச் சேர்ந்த முருகன் மகன் சம்பத் (21) என்றவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்  மகன் குமரவேல் (24) என்பவருக்கும் வெட்டு  விழுந்தது. இதில் மாரிமுத்து கோவில்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.  மற்ற இருவரும் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரிவாள் வெட்டு விழுந்தவுடன்  கட்டுமான தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். இதை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள்ஓடி வந்து தாக்குதல் நடத்திய பிரதிப் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து தர்மஅடி  கொடுத்தனர்.

தகவல் அறிந்து கோவில்பாளையம் போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் சிக்கிய பிரதீப்பை மீட்டனர். இதில் பிரதீப்புடன் வந்த நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிரதீப்பை போலீஸ் பாதுகாப்போடு, தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாக கூறியதால் கோவை  அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். கோவை எஸ்பி பத்ரி நாராயணன்  உத்தரவு பேரில், கோவில்பாளையம்  இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு, கட்டுமான தொழிலாளர்கள் மீது அரிவாள்  வெட்டி தாக்குதல் நடத்திய  பிரதீப் கூட்டாளிகளை வலைவீசி  தேடுகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in