கேரளாவில் தொடங்கியது உலகக்கோப்பை கால்பந்து ஜுரம்: அர்ஜென்டினா பத்திரிகைகளில் எதிரொலிப்பு

கேரளாவில் தொடங்கியது உலகக்கோப்பை கால்பந்து ஜுரம்:  அர்ஜென்டினா பத்திரிகைகளில் எதிரொலிப்பு

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் கேரள ரசிகர்கள் ஆற்றங்கரையில் போட்டி போட்டுக்கொண்டு அர்ஜென்டினா, பிரேசில் வீரர்களின் படங்களை பிரம்மாண்ட கட் அவுட்டாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் அதிகம். ஆனால் கேரளாவில் அதற்கு இணையாகக் கால்பந்து ரசிகர்கள் அதிகம். அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி, பிரேசில் வீரர் நெய்மர் இருவரையும் சினிமா கதாநாயகர்களுக்கு நிகராகக் கொண்டாடும் விளையாட்டு ரசிகர்கள் கேரளத்தில் உண்டு.

இந்நிலையில், கத்தார் நாட்டில் வருகிற 20-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து துவங்க இருக்கும் நிலையில் கேரள ரசிகர்கள் பல்வேறு விதங்களில் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

கோழிக்கோடு மாவட்டத்தில் புல்லாவூர் நகர ரசிகர்கள் இரண்டு தினங்கள் முன்பு தங்கள் கனவு நாயகனும் அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸியின் ஆளுயர கட்அவுட் 30 அடி உயரத்தில் அப்பகுதியில் உள்ள ஆற்றின் நடுவே வைத்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இதை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த நிலையில் அர்ஜென்டினா பத்திரிகைகளிலும் இது முதல் பக்கம் செய்தியாக மாறியது.

ஆனால் இன்று பிரேசில் வீரர் நெய்மர் ரசிகர்கள் ஒருபடி மேலே போய் தங்கள் கனவு நாயகனுக்கு அதே ஆற்றின் கரையில் 40அடி உயர கட்அவுட் வைத்து தங்கள் விளையாட்டு மோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இரு கட் அவுட்களும் சேர்ந்தது போல் இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in