குட்டிகளைத் திருடச் சென்றவர் சிங்கத்திடம் பலியானார்: உயிரியல் பூங்காவில் நடந்த பயங்கரம்

குட்டிகளைத் திருடச் சென்றவர் சிங்கத்திடம் பலியானார்:  உயிரியல் பூங்காவில் நடந்த பயங்கரம்

ஆப்பிரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் தனது குட்டிகளைத் திருட முயன்றவரை சிங்கம் கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கானாவில் அக்ரா உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள சிங்கம் கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு வெள்ளை சிங்கக்குட்டிகளை ஈன்றது. இந்த நிலையில் அந்தக் குட்டிகளை திருட நேற்று பிற்பகல் ஒருவர் முயற்சியி செய்துள்ளார். அப்போது தனது குட்டிகளை ஒருவர் திருடவருவதைக் கண்ட சிங்கம் அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவரின் உடலை மீட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கானாவின் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கான துணை அமைச்சர் பெனிட்டோ ஓவுசு பயோ கூறுகையில், " உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு குட்டிகள் உள்ளன. எனவே, மிக அருகில் வந்தால், நீங்கள் தங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்ல முயற்சிப்பதாக அவை உணரக்கூடும். இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in