ரத்தக் காயங்களுடன் உதவி கேட்ட சிறுமி; வீடியோ எடுத்த நபர்கள்: கண்கலங்க வைத்த போலீஸ்காரரின் மனிதநேயம்!

ரத்தக் காயங்களுடன் உதவி கேட்ட சிறுமி; வீடியோ எடுத்த நபர்கள்: கண்கலங்க வைத்த போலீஸ்காரரின் மனிதநேயம்!

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுமிக்கு உதவி செய்ய அங்கிருந்தவர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனால், அந்த சிறுமியை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். அதே நேரத்தில் போலீஸ்காரரின் மனிதநேயம் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், கனோஜ் மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி 13 வயதுடைய தனது மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரைத் தொடர்ந்து சிறுமியை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அரசு விருந்தினர் மாளிகை அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுமி கிடக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. பலத்த ரத்தக்காயங்களுடன் கிடக்கும் சிறுமியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்கின்றனர். அப்போது, அந்த சிறுமி தனது கைகளை நீட்டி உதவி கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அதே நேரத்தில் சிறுமி தொடர்பான இன்னொரு வீடியோ வெளியானது. அதில், போலீஸ்காரர் ஒருவர் சிறுமியை தனது தூக்கிக் கொண்டு ஆட்டோவை நோக்கி ஓடும் காட்சி பதிவாகியிருக்கிறது.

அதன் பிறகு சிறுமிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பலர் தவிர்த்தனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங், "சிறுமி ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக விருந்தினர் மாளிகை காவலாளி கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியுடன் இளைஞர் ஒருவர் வந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். சிறுமியுடன் வந்த இளைஞரை தேடி வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in