ஹாமூன் புயல் வங்கதேசம் அருகே கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே இன்று காலை கரையைக் கடந்தது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை காலை உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஹாமூன்’ தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில், தீவிர புயலாக இருந்த ஹாமூன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே இன்று காலை கரையைக் கடந்தது.
இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கதேசம் அருகே இன்று காலை புயல் கரை கடந்தபோது மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை தொடரும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!