தொடரும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள்: புதிய எஸ்பிக்கு காத்திருக்கும் சவால்கள்!

தொடரும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள்: புதிய எஸ்பிக்கு காத்திருக்கும் சவால்கள்!

செங்கல்பட்டு பகுதியில் அடிக்கடி நடைபெறும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

செங்கல்பட்டு பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் காதில் அணிந்திருந்த கம்பல் கீழே விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தேடத் தொடங்கினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் சுப்புலட்சுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு வேகமாகச் சென்றுவிட்டனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து நகர விரிவாக்கம், அரசு கட்டிடங்கள் எனப் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எஸ்.பி. அலுவலகமும் செங்கல்பட்டிற்கு வந்துள்ளதால் காவல் துறையினரின் எண்ணிக்கை முன்பைவிட கூடி இருக்கிறது. ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொள்ளை சம்பவங்கள் குறைவதாக இல்லை. ‘க்ரைம் ரேட்’ கூடாமல் பார்த்துக் கொள்வதற்காக பெரும்பாலான கொள்ளை, திருட்டு, வாகன திருட்டு உள்ளிட்ட சம்பவங்களுக்கு காவல் துறையினர் வழக்குப் பதியாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள எஸ்.பி. டாக்டர் பிரதீப் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in