வட மாநில இளைஞர்களால் சென்னையில் அதிகரிக்கும் குற்றங்கள்: காவல்துறை திடீர் உத்தரவு!

வட மாநில இளைஞர்களால் சென்னையில் அதிகரிக்கும் குற்றங்கள்: காவல்துறை திடீர் உத்தரவு!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 424 வெளிமாநிலத்தவர் பல்வேறு குற்றச் செயல்களில்  ஈடுபட்டுள்ளதால், வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் விவரங்களைத் திரட்ட தமிழகக் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னைக்கு வேலை வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களில் சிலருக்கு வேலை கிடைக்காத காரணத்தாலும், குற்றச் செயலில் ஈடுபடுபவர்களின் தொடர்பு கிடைப்பதாலும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள நகைக் கடையில் வடமாநில இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிமாநில, வெளிநாட்டவர்களின்  விவரங்களைத் தமிழகக் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.  அதில்  கடந்த இரண்டு ஆண்டுகளில் 424 வெளிமாநிலத்தவர்களும்,  96 வெளிநாட்டவர்களும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் 396 வெளி மாநிலத்தவர்கள் ,  82 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  அதிலும்,  சென்னையில் குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களில் 21 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில், 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும்  மோசடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in