மின்னல் வேகத்தில் மோதிய கார்; பற்றி எரிந்த காரிலிருந்து காயங்களுடன் தப்பிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

மின்னல் வேகத்தில் மோதிய கார்; பற்றி எரிந்த காரிலிருந்து காயங்களுடன் தப்பிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

சாலையோர தடுப்பு கம்பியில் மோதிய கார் திடீரென பற்றி எரிந்ததால் காயங்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து டெல்லி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பியில் பயங்கரமாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. கார் மோதிய வேகத்தில் அவரது தலை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அரியானாவில் உள்ள ரூர்க்கி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயத்தின் விவரம் குறித்து மருத்துவமனையில் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றவர் ரிஷப் பண்ட். இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரராக இருக்கும் ரிஷப் பண்ட், 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதோடு 2271 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 121 அடித்துள்ளார். 5 சதமும், 11 அரை சதங்களும் விளாசி இருக்கிறார். 30 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 763 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக 125 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதமும், 5 அரை சதமும் எடுத்திருக்கிறார். 66 டி20 போட்டியில் விளையாடி உள்ள ரிஷப், 987 ரன்கள் எடுத்ததோடு அதிகபட்சமாக 65 ரன் அடித்துள்ளார். 3 அரை சதம் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in