
இந்திய- சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே எல்லையில் நடந்த மோதலில் பலர் உயிரிழந்தனர். தற்போது வரை இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய எல்லையில் அத்துமீறும் சீன வீரர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்து வருகின்றனர்.
சீன ராணுவத்தினரின் எல்லை மீறலை தடுக்க இந்திய வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடும் குளிர் மற்றும் பனிபாறைகளுக்கு மத்தியில் இந்திய ராணுவத்தினர் கிரிக்கெட் மற்றும் ஐஸ் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.