புட்டபர்த்திதான் தலைமையிடம்; ஆந்திராவில் உருவானது ஸ்ரீசத்யசாய் மாவட்டம்

13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக விரிவடைந்தன
புட்டபர்த்தி சாய்பாபா
புட்டபர்த்தி சாய்பாபாtwitter

புட்டபர்த்தியை தலைமையிடமாகக் கொண்டு, ஸ்ரீசத்யசாய் என்ற புதிய மாவட்டத்தை ஆந்திர அரசு உருவாக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஆந்திரா மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவற்றில் புட்டபர்த்தியில் பிறந்த பகவான் சாய்பாபா நினைவாக அனந்தப்பூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புட்டபர்த்தியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஸ்ரீசத்ய சாய்’ என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, பாலாஜி, அன்னமய்யா, என்டிஆர், ஒய்எஸ்ஆர் போன்றவர்களின் பெயர்களிலும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் 7,771 கிமீ பரப்பளவுடன், 17.22 லட்சம் மக்கள் தொகை உடையதாக இருக்கும் எனவும் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும், புட்டபர்த்தி உட்பட 3 வருவாய் கோட்டங்களும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வரவேற்றுள்ளது. “சாய்பாபாவின் 97-வது பிறந்தநாளைக் கொண்டாடத் தொடங்கும் நிலையில், மாநில அரசின் அறிவிப்பு அனைத்து சாய் பக்தர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in