ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல்... பக்தர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல்... பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் கிழக்கு வாசல் ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, ஒரு வித அச்சத்துடன் கோயிலுக்குள் செல்கின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

இந்தநிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்யாத நிலைகளில் கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபுரம் வழியாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனிடையே, கோயிலின் கோபுரங்கள், மதில் சுவர்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில், 67 லட்சம் செலவில் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in