கேரள மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு!

கேரள மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு!

கேரள மாநில முன்னாள் மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சற்றுமுன்பு மரணம் அடைந்தார்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம், மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கோவிந்தன் நியமிக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கட்சி, ஆட்சி என ஒருவர் இரு பொறுப்பில் இருக்க முடியாது என்பதால் கோவிந்தன் அமைச்சர் பொறுப்பை விட்டார்.

கொடியேரி பாலகிருஷ்ணன் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு தீவிரமாக பாடுபட்டவர் ஆவார். சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்த கொடியேரி பாலகிருஷ்ணன், இருபது ஆண்டுகள் கேரள சட்டசபையில் எம்.எல்.ஏவாக இருந்தவர். அமைச்சராகவும் இருந்துள்ளார். புற்றுநோய் பாதிப்பினால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொடியேறி பாலகிருஷ்ணன் இன்று உயிர் இழந்தார். அவரது மரணம் கேரள மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in