மீண்டும் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை: மத்திய அரசு முடிவு

மீண்டும் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை: மத்திய அரசு முடிவு

சர்வதேச பயணிகளுக்காக விமான நிலையங்களில் கோவிட்-19 சோதனை நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மீண்டும் தொடங்குகிறது.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாக இந்தியா வருபவர்களின் மாதிரிகள் இனி தோராயமாக கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் கோவிட்-19 பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் 10 வகையான கரோனா வைரஸ் வகைகள் உள்ளன. சமீபத்திய புதிய கரோனா தொற்று ஒமைக்ரான் BF.7 ஆகும். இது சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்று நாட்டின் கோவிட் நிலைமை குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர், “கோவிட் இன்னும் முடியவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அமைச்சர் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in