காங்கிரசுக்கு தடை போடுங்கள்: ட்விட்டருக்கு கோர்ட் அறிவுறுத்தல்

காங்கிரசுக்கு தடை போடுங்கள்: ட்விட்டருக்கு கோர்ட் அறிவுறுத்தல்

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கேஜிஎஃப்-2 திரைப்படத்தின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக இசை நிறுவனம் தொடுத்த வழக்கில், ட்விட்டர் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் அங்கமாக பல்வேறு பாடல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் பலவும் பிரபல இந்தி திரையிசைப் பாடல்களின் மெட்டுக்களில் அமைந்தவை. சில பாடல்கள் இசைத் துணுக்குகளாக அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கேஜிஎஃப்-2 இந்தி திரைப்படத்தின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக, தொடர்புடைய இசை நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்டி என்ற நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பதிப்புரிமை மீறல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்தனர். இசை நிறுவனத்தின் புகாரில் ‘நாங்கள் எந்தவொரு கட்சிக்கும் எதிரானவர்கள் இல்லை. பதிப்புரிமை மட்டுமே இசை நிறுவனங்களுக்கு வாழ்வளித்து வருகின்றன. இந்த நிலையில் பெரும் தொகை செலவழித்து நாங்கள் பெற்ற இசையை, எங்கள் அனுமதியின்றி தரவிறக்கி பயன்படுத்தியதுடன் அவற்றை தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்குகளிலும் பயன்படுத்தி உள்ளார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவை தொடர்பான முறையீடு இன்று தாக்கலானபோது, காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஒற்றுமை பயணத்தின் ட்விட்டர் கணக்குகளை தடை செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உட்பட 3 காங்கிரஸார் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in