ஜெராக்ஸ் கடையில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்: 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

ஜெராக்ஸ் கடையில் கள்ளநோட்டு அச்சடிப்பு
ஜெராக்ஸ் கடையில் கள்ளநோட்டு அச்சடிப்புஜெராக்ஸ் கடையில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்: 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

நாகர்கோவில் ஜெராக்ஸ் கடையில் கள்ளநோட்டு அச்சடித்து டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற நான்கு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்கலாம் ஆசாத்(37). இவர் நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது ஜெராக்ஸ் கடையில் மதுரையைச் சேர்ந்த சதீஷ், சவுந்திரபாண்டியன், கணேசன், சரவணன், சந்திரசேகர் ஆகியோர் வேலைசெய்து வந்தனர். மத்திய அரசு உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் பணத்தாள்களை ஒழிப்பதற்கு முன்பு இவர்கள் தங்கள் ஜெராக்ஸ் கடையில் 1000 ரூபாய் தாளை கள்ளநோட்டாக அச்சடித்தனர்.

அதை கோட்டாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மாற்றி மதுவாங்க முயன்றனர். அப்போது டாஸ்மாக் ஊழியருக்கு இதில் சந்தேகம் ஏற்படவே, அவர் இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்திற்குப் புகார் கொடுத்தார். இதில் ஆறுபேரையும் போலீஸார் கைதுசெய்து, ஜாமீனில் வந்து இருந்தனர். இதில் குற்றவாளிகளில் கணேசன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் இறந்துவிட்டனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கும், தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று மாலை நீதிபதி அசன் முகம்மது உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in