ஹைதராபாத்தில் இருந்து கொரியரில் வந்த கள்ள ரூபாய் நோட்டுகள்: சென்னையில் ஒருவர் கைது

ஹைதராபாத்தில்  இருந்து கொரியரில் வந்த கள்ள ரூபாய் நோட்டுகள்: சென்னையில் ஒருவர் கைது

ஹைதராபாத்தில் இருந்து கொரியர் மூலம் வந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட சென்னையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஸ்(30). இவர் ஜிம் பாய்ஸ் சாப்பிடும் புரோட்டீன் பவுடர் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரியரில் ஒரு பார்சல் வந்தது. அதனை வாங்குவதற்காக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கொரியர் அலுவலகத்திற்கு சதீஷ் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கான பார்சலை ஸ்கேன் செய்த போது அதில் சந்தேகத்திற்கிடமாக ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஊழியர்கள் சதீஷிடம் கேட்ட போது இது தனக்கு வந்த பார்சல் இல்லை என்று கூறி விட்டு பார்சலை வாங்காமல் திரும்பி சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கொரியர் நிறுவன ஊழியர்கள் அந்த பார்சலைக் கிண்டியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். அங்கு மேலாளர் பார்சலில் ரூபாய் நோட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின்படி கிண்டி போலீஸார் பார்சலைப் பிரித்து பார்த்த போது அதில் 8 இருநூறு ரூபாய் நோட்டுக்கள். 69 நூறு ரூபாய் கள்ள நோட்டுக்களும் இருந்தது.

8500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், சதீஷிசைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஹைதராபாத்தை சேர்ந்த சுஜித் என்பவரை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு கொரியர் மூலம் கள்ள நோட்டுகளை வரவழைத்து சென்னையில் பல்வேறு பகுதியில் சதீஷ் புழக்கத்தில் வி்ட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்த போலீஸார், கள்ள நோட்டு அனுப்பியவருக்கும், சதீஷிக்கும் என்ன தொடர்பு, இதுவரை எத்தனை பார்சல் வந்துள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in