ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு: அரும்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது

ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு: அரும்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது
Updated on
1 min read

தமிழ்நாட்டில் ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஜன.10) அரும்பாக்கத்தில் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவு அடிப்படையில் ஏற்கெனவே எம்பிபிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பின் வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஆயுஷ் மருத்துவ படிப்புகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

அலோபதி மருத்துவப்படிப்புக்கு இணையாக நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பும், ஒராண்டு பயிற்சியும் என மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படிக்கப்படும் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் 19 கல்லூரிகள் உள்ளன. இந்த கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் நடைபெறும்.

சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் 19 கல்லூரிகள் உள்ளன. இதில் அரும்பாக்கம் கல்லூரியில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 5 ஆண்டு பட்டப்படிப்பான ஆயுஷ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கிடையாது. தமிழக அரசு பாடத்திட்டத்தில் பிளஸ்-2-ல் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in