‘கரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதம்’ -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் புது குண்டு!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

’கரோனா வைரஸ் இயற்கையானதல்ல; அது ஓர் உயிரியல் போர் முறையின் அங்கம்’ என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

உலக நாடுகளில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் இன்றியும் உலகம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. இதன் மத்தியில் கரோனா வைரஸ் தொடர்பான புதிரான தகவல்களை ஆன்மிக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

”பெருந்தொற்று பரவல் என்பதும் அதனால் உருவான பொதுமுடக்கமும் மிகப்பெரும் சதித்திட்டத்தின் அங்கமாகும். கரோனா வைரஸ் என்பது இயற்கையில் உருவானதல்ல. சில நாடுகளின் சதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஓர் உயிரியல் ஆயுதம் ஆகும். கரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் திறன் இழந்திருப்பதாக பெரிய நாடுகள் தெரிவித்து வருவதே இதற்கு சாட்சி” என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ஆன்மிக குருவின் திடீர் தகவல் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரில் முற்றிலும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முறைகளை கையாண்டு, அதிலிருந்து உலகம் வெகுவாய் மீண்டிருக்கிறது. மேலும், ஏராளமான உயிர்ப்பலிகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நேர்மறை போக்கிற்கு இணையாக, கரோனா வைரஸ் தொடர்பான புனைவுகள், அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களும், தடுப்பூசிக்கு எதிரான வாதங்கள் தொடரவே செய்கின்றன. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கருத்தும் அந்த வகையில் சேர்கிறதா அல்லது அவர் வாதத்துக்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in