இந்தியாவில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு சற்று குறைந்தது!

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 952 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 1,072 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,059 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,49,394 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் இன்று 1,27,952 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு 4,19,52,712 லிருந்து 4,20,80, 664 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா பரவல் மற்றும் பாதிப்பு விகிதம் 7.98% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,059 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதுவரை 5,01,114 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,072 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,059 ஆக குறைந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதித்து 13,31,648 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 47,53,081 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரையில் 168.98 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in