மூக்கு வழியே இனி கரோனா தடுப்பு மருந்து செலுத்தலாம்: அனுமதி தந்தது மத்திய அரசு

மூக்கு வழியே இனி கரோனா தடுப்பு மருந்து செலுத்தலாம்: அனுமதி தந்தது மத்திய அரசு

மூக்கு வழியாக செலுத்தும் நாட்டின் முதல் கரோனா தடுப்பு மருந்துக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

'பிபிவி154' என்ற மூக்குத் துவாரம் வழியே செலுத்தப்படும் கரோனா மருந்துக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று பாரத் பயோடெக் நிறுவனம் சோதனை செய்தது.

இந்த நிலையில், சோதனை செய்த தரவுகளை சமர்ப்பித்து மூக்கு வழி செலுத்தக்கூடிய கரோனா மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இதனையொட்டி நடைபெற்ற சோதனைகளில் இந்த மருந்து பாதுகாப்பானது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in