கரோனா அச்சுறுத்தல் மீண்டும் நெருங்குகிறது: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் நெருங்கி வருகிறது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் எச்சரித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நாம் அச்சுறுத்தல்களை புறந்தள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “ கரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் நெருங்கி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை ஒவ்வொரு கழுவ வேண்டும், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

மேலும், “பண்டிகை மற்றும் விடுமுறை காலம் வருவதால் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் அச்சுறுத்தல்களை நாம் புறந்தள்ளலாம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு யோகா பயன்தருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 15 சதவீதம் குறைக்கப்படுகிறது மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார் அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மருத்துவ வளர்ச்சிக்காக டெல்லியின் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் நிறுவப்பட்டு உள்ளது.

கங்கை போன்ற நதிகளை தூய்மையாக வைத்திருப்பது நமது தலையாய பொறுப்பு. கங்கை அன்னையுடன் நமது கலாச்சாரம், பாரம்பரியம் மிகுந்த பிணைப்பு கொண்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பதிந்து இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி. பெரியம்மை, போலியோ போன்ற நோய்களைப் போல் கருங்காய்ச்சல் நோயையும் இந்தியா ஒழித்துள்ளது” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in