சென்னையில் கொரோனா பரவல் 500யை கடந்தது: பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டம்!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனைசென்னையில் கொரோனா பரவல் 500யை கடந்தது; பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டம்!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 யை கடந்துள்ள நிலையில், பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகக் கேரளா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள்,பிற நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 1,703 சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக சென்னையில் 564 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனச் சென்னை மாநகராட்சி வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனைப் பொருட்படுத்தாத நிலையே தொடர்கிறது. அதனால் பரிசோதனைகளை அதிகப்படுத்தி, கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in