தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசனை!

கொரோனா
கொரோனாதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசனை!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 303 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது வரை 1530 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தத் தமிழக சுகாதாரத்துறை ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை நேற்று 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 1,530 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கடந்த சில தினங்களாகவே தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும், நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 497 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று நடந்த மாநில அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, முகக்கவசம் மற்றும் பொதுவெளிகளில் தனிமனித இடைவெளியை உறுதி செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தத் தமிழக சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in