இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு!

கரோனாவால் உயிரிழப்பு
கரோனாவால் உயிரிழப்புhindu கோப்பு படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுதும் புதிதாக 71,365 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,24,10,976 ஆக உயர்ந்தது. நேற்று 1,188 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,05,279 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,211 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது 8,92,828 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in