இந்தியாவில் குறைந்த உயிரிழப்பு; கரோனா பாதிப்பு

தடுப்பூசி செலுத்தியவர்கள் 161.16 கோடி பேர்
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

இந்தியாவில் கரோனாவுக்கு நேற்று 700 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பும், பாதிப்பும் சற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 3வது அலை அதிகரித்து வருகிறது. சில நாட்களாக நாட்டில் கரோனா பரவல் மின்னல் வேகத்தில் பரவி வந்தது. நேற்று கரோனாவால் ஒரே நாளில் 703 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிாிழப்பு 400 ஆக குறைந்துள்ளது. நேற்று கரோனா பாதிப்பு 3.47 லட்சம் பேர் என்று இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 47 ஆயிரத்து 254-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்து 1 ஆயிரத்து 482 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 லட்சத்து 13 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 161 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரத்து 78 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in