இந்தியாவில் 83,876 பேருக்கு கரோனா பாதிப்பு; 895 பேர் உயிரிழப்பு

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைHindu கோப்பு படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 895 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 895 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதுவரை 5,02,874 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கரோனா தொற்று பாதித்த 11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,99,054 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 169.63 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரட்தில் 14,70,053 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in