கொரோனாவால் மாரடைப்பா?: ஆய்வு செய்கிறது ஐசிஎம்ஆர்!

மாரடைப்பு அதிகரிப்பு
மாரடைப்பு அதிகரிப்பு கொரோனாவால் மாரடைப்பா? - ஆய்வு செய்கிறது ஐசிஎம்ஆர்..!

கொரோனா பாதிப்புகளுக்குப் பின் மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதுகுறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு 52 சதவீதம் மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மாரடைப்பு மரணங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படுவதால் புகைப்பழக்கம், போதை பழக்கம் உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக இளம் வயதினரிடையே மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவது மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனையடுத்து கொரோனாவால் தான் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகிறதா என்பதனை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஐசிஎம்ஆர்க்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in