தமிழகத்தில் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பம்: திருச்சியில் ஒருவர் பலி

கொரோனாவால் திருச்சியில் வாலிபர் பலி
கொரோனாவால் திருச்சியில் வாலிபர் பலிதமிழகத்தில் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பம்: திருச்சியில் ஒருவர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பதால் நீண்ட நாட்களுக்குப் பின் திருச்சியில் வாலிபர் ஒருவர் உயிர் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் ஒமிக்ரைன் வகை தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிந்தாமணியைச் சேர்ந்த 27 வயது வாலிபர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணி புரிந்து வந்தார். இவர் குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். கோவாவில் இருந்து திருச்சி திரும்பிய அந்த வாலிபருக்கு கடும் வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு அங்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்வதற்கு முன்பே அவர் நேற்று உயிரிழந்தார். கடந்த ஜூலையில் கொரோனாவால் முதியவர் ஒருவர் இறந்தநிலையில் 8 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் ஒருவர் மீண்டும் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் திருச்சியில் 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in