பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா - ராகுல் காந்திக்கு உடல்நலக்குறைவு

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா - ராகுல் காந்திக்கு உடல்நலக்குறைவு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீண்டும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரியங்கா காந்தி, “ மீண்டும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளேன். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் சோனியா காந்திக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, பிரியங்கா காந்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இரண்டே மாதத்தில் தற்போது மீண்டும் அவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ராஜஸ்தான் ஆல்வார் செல்லும் பயணத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தியபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in