தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 30 பேருக்கு கரோனா!

தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 30 பேருக்கு கரோனா!

தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா வைரஸ் தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையின் சார்பில் கரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து அந்த வகுப்பில் பயிலும் மொத்த மாணவ, மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 மாணவ, மாணவிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

ஆனால் இந்த மாணவ, மாணவிகளுக்கு லேசான அறிகுறிகளே இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படவில்லை. அவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையின் சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in