இந்தியாவில் ஒரே நாளில் 1,72,433 பேருக்கு கரோனா; 1,008 பேர் உயிரிழப்பு

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1008 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் புதிதாக 1,72,433 பேர் கரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,18,03,318ஆக உயர்ந்தது. புதிதாக 1008 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,98,983 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,59,107 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,97,70,414 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,33,921 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 95.14% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.67% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 1,67,87,93,137 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 55,10,693 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in