இந்தியாவில் கரோனா உயிரிழப்பு திடீர் அதிகரிப்பு!

ஒரே நாளில் 2.51 லட்சம் பேர் பாதிப்பு
கரோனா தொற்று
கரோனா தொற்றுhindu கோப்பு படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா தொடர்ந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக பதிவாகி வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 443 பேர் குணம் அடைந்துள்ளனர். கரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 05 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.

தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.60% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.18% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 1,64,44,73,216 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 57,35,692 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in