இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா மரணம்... குறைந்து வரும் பாதிப்பு

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைகோப்பு படம்

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஒரே நாளில் கரோனா உயிரிழப்பு 959 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2,34,281ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,13,2440 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2,62,628 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,89,76,122 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18,31,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 959 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,95,50 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 166 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 227 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in