இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா மரணம்!

ஒரே நாளில் 30,757 பேருக்கு கரோனா பாதிப்பு
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா மரணம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர். ஒரே நாளில் 30,757 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,27,54,315 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 67 ஆயிரத்து 538 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 174 கோடியே 24 லட்சத்து 36 ஆயிரத்து 288 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 34,75,951 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in