தமிழக பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

தமிழக பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

பள்ளிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் புதிய வகை கரோனா காரணமாக, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், முககவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருக்குமாறும் மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது.

தமிழக அரசு கட்டுப்பாடு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளிடம் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆயினும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்காமல் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், ஜன.2-ம் தேதி தொடங்கும் பள்ளிகளுக்கு கரோனா கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது. தமிழ்நாடு மருத்துவ நல்வாழ்வுத்துறையும், தமிழக அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக பள்ளிகளில் விரைவில் கரோனா விதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in