இதுக்கு ஒரு 'என்டே' இல்லையா?... இன்றும் கியாஸ் விலை உயர்வு: ஒரு சிலிண்டர் விலை ரூ.1068

இதுக்கு ஒரு 'என்டே' இல்லையா?... இன்றும் கியாஸ் விலை உயர்வு: 
ஒரு சிலிண்டர் விலை ரூ.1068

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று மேலும் ஐம்பது ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளதால் சாமானிய மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி வருகின்றன. அதன்படி ஜூலை 6-ம் தேதியான இன்று வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயை அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

கடந்த மே மாதம் 7-ம் தேதியன்று ரூ.1,015.50 ஆக இருந்த சிலிண்டர் விலை மே 19-ல் ரூ.1,018.50ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அதில் மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டதால் ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை 130 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in