பாலியல் வழக்கிலிருந்து விடுதலை: சர்ச்சையில் சிக்கிய பிஷப் திடீர் ராஜினாமா

பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல்
பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல்

கன்னியாஸ்திரியின் பாலியல் புகாரால் சர்ச்சையில் சிக்கி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது கேரள திருச்சபை மத்தியில் பேசுபொருளாக எழுந்துள்ளது.

ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிரான்கோ முல்லக்கல் மீது கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் அளித்தார். அதில், "கடந்த 2014-ல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பிஷப் ஃபிரான்கோ முல்லக்கல்லை கைது செய்தனர். இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் தீர்ப்பளித்த கோட்டம் நீதிமன்றம், பிஷப் ஃபிரான்கோ முல்லக்கல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுவித்தது. அதன் பின்னர் மீண்டும் அவர் ஜலந்தர் பிஷப் ஆகவே நியமிக்கப்பட்டார்.

இதன்மூலம் ஃபிரான்கோ முல்லக்கல் கேரளம் முழுவதும் தெரிந்த பேராயரும் ஆனார். இந்தநிலையில் இப்போது திடீரென பிஷப் பொறுப்பில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வாடிகன் போப் அலுவலகத்திற்கு அவர் எழுதியக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பிலேயே, ``இது ஒழுங்கு நடவடிக்கை இல்லை. ஃபிராங்கோ கோரியதன் பேரில் இந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது” எனவும் கூறப்பட்டு உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in