நாளை முதல் அமலுக்கு வருகிறது... திடீர் கட்டுப்பாடு!

திருப்பதி மலைப்பாதை
திருப்பதி மலைப்பாதை

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகளால் சிறுவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தேவஸ்தானம் விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

கடந்த மாதம் திருப்பதி மலை பாதையில் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்றது. அதனை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்தனர். இதேபோல் சில தினங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நெல்லுரை சேர்ந்த தினேஷ் அவரது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். தனது ஆறு வயது மகள் லட்ஷிதாவுடன் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மலைப் பாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே லட்ஷிதா திடிரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் திருமலை இரண்டாவது நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in