கரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்: தலைமைச் செயலகம் சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்

கரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்: தலைமைச் செயலகம் சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்

பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் லேங்ஸ் சாலையில் இருந்து தலைமை செயலகத்தை நோக்கி ஒப்பந்த செவிலியர்கள் பேரணியாக செல்ல முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் ராஜரத்தினம் மைதானம் வரை செல்ல அனுமதி அளித்தனர். முன்னதாக லேங்ஸ் சாலையில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திரண்டனர்.

இந்த பேரணி காரணமாக அப்பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுத் தொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உணவு பகுப்பாய்வு வாகனத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் வழங்கப்படும் பணியினை ஏற்றுக் கொள்ள வேண்டும், இதனால் சொந்த ஊருக்கு அருகில் கூடுதல் ஊதியத்தில் பணிப்புரியும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in