மர்மநபரைப் பிடிக்க ரயில் நிலையங்களில் தொடரும் சோதனை: பெட்ரோலுடன் சிக்கிய கேரள வாலிபர்!

கேரளா ரயிலில் தீ
கேரளா ரயிலில் தீரயில் நிலையங்களில் தொடரும் சோதனை: பெட்ரோலுடன் சிக்கிய கேரள வாலிபர்

கேரளத்தில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் ரயிலில் இருந்து குதித்த மூவர் உயிர் இழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தநிலையில் பெங்களூரு- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்ரோல் பாட்டிலுடன் வாலிபர் ஒருவர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் இச்சம்பவத்தின் எதிரொலியாக தீவிர சோதனை நடந்து வருகிறது. திருச்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் பெங்களூரு- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சோதனை செய்தனர். அப்போது ரயிலில் ஒரு வாலிபர் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வைத்து இருந்தார்.

அவரைச் சுற்றி வளைத்த ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் கோட்டயத்தைச் சேர்ந்த சேவியர் வர்க்கீஸ் எனத் தெரியவந்தது. அவர் போலீஸாரிடம் கூறுகையில், ” எனது டூவீலரை ரயில்வே மூலம் ரயிலில் பார்சல் அனுப்பியுள்ளேன். அப்படி ரயில் வழியாக பார்சல் அனுப்பும்போது அந்தப் பைக்கில் பெட்ரோல் இருக்கக்கூடாது. பெட்ரோலை முழுவதுமாக எடுத்துவிட வேண்டும். அதனால் தான் என் பைக்கில் இருந்த பெட்ரோலை இந்தப் பாட்டிலில் எடுத்து வைத்து உள்ளேன்” என்றார். அவரை ரயில்வே போலீஸார், ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருள்களைக் கொண்டு சென்றதற்காக அபராதம் விதித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in