அம்மாவிடம் தொடர்ந்து சண்டை: தந்தை வைத்திருந்த கத்தியால் தன்னைத்தானே குத்தி உயிரை மாய்த்த மகன்

அம்மாவிடம் தொடர்ந்து சண்டை: தந்தை வைத்திருந்த கத்தியால் தன்னைத்தானே குத்தி உயிரை மாய்த்த மகன்

தாயும், தந்தையும் தொடர்ந்து சண்டைப்போட்டு கொண்டதால் அவர்களின் கண்முன்னே மகன் கத்தியால் குத்தி உயிரை மாய்த்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.

சென்னை, குன்றத்தூர் இந்திரா காந்தி நகரில் வசித்து வந்தவர் பிரபாகரன். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ள இவர், அடிக்கடி தனது மனைவியிடம் தகாறு செய்து வந்துள்ளார். அதேபோல் இன்றும் தனது மனைவியிடம் பிரபாகரன் தனது கையில் கத்திய வைத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மகன் பாலகிருஷ்ணன் வேதனை அடைந்ததோடு, தந்தையின் கையில் இருந்த கத்தியை பிடுங்கிக் கொண்டு தனது மார்பில் சரமாரியாக குத்தியிருக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் சண்டையால் மனவேதனை அடைந்த மகன் கத்தியால் குத்தி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in